புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ளது பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் தேரோட்டம் வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கவிதா ராமு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
