தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரித்து உச்ச அளவை எட்டும். இதை ஈடு செய்ய வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இந்தாண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 22,000 மெகாவாட்டுக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கிறது. இதை ஈடு செய்ய குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 வரையிலான மின் தேவையை சமாளிக்க 2750 மெகாவாட் மின்சாரமும், பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் மாலை 6 மணி இரவு 12 மணி வரை 5775 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மனு தாக்கல் செய்து இருந்தது. தை பரிசீலனை செய்த ஆணையம் இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.