Skip to content

பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…

இன்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம். அதை முன்னிட்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் நமக்கு இதயம் இருப்பதை உணர்த்தலாம் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் கனமழை பெய்து சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.  மழை விட்டு 24 மணி நேரம் கடந்த பின்னரும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.  தண்ணீர் சூழ்ந்துள்ள  குடியிருப்புகளில் மக்கள் வெளியே வர முடியாமலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான பால், உணவு உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதற்கும் தன்னார்வலர்கள் பலரும்  களமிறங்கி  வருகிறார்கள்.
இன்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம். இந்த நிலையில் அதனை சுட்டிக்காட்டி இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ‘இன்னமும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது. வளர்வது வீடுகளுக்கு உணவும் பணமும் வழங்க மனம் இருந்தாலும் ஓரிரு பகுதிகளுக்கு மட்டுமே இன்று என்னால் செய்ய முடிகிறது. அதையும் தன்னார்வலர்கள் உதவியுடனே செய்தேன். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து நமக்கு இதயம் இருப்பதை உணர்த்தலாம்’ என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!