தமிழ்நாடு மின் வாரியத்தில், பணிக்காலத்தில் உயிரிழந்த 103 ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தலைமை செயலாளர் வெ. இறையன்பு, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
103 ஊழியர்களுக்கு பணி வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும், விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்தார்.