Skip to content
Home » கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

  • by Senthil

திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்த்தவர் தேவகி (41) இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் அவர்  கர்ப்பமாக இருந்தார் .திடீர் உடல்நிலை பிரச்சினை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்
அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இதே போன்று திருச்சியை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண் வழக்கறிஞர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

தற்போது அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு பெண் வழக்கறிஞர் கருக்கலைப்பின் போது உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!