Skip to content
Home » 9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

  • by Senthil

இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசநாயக (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.

மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா்.. கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கைஅதிபராக அனுர குமார திசாநாயக இன்று காலை 10 மணி அளவில் பதவி ஏற்றார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி  ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்துவைத்தார். இலங்கையின் 9வது அதிபராக திசநாயக பதவியேற்றுள்ளார்.

தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து  புதிய இலங்கையை  உருவாக்குவோம் என்று திசநாயக கூறி உள்ளார்.

அனுர குமார திசநாயக கம்யூனிச கொள்கை உடையவர். எனவே இவர் சீனாவுடன் நெருக்கம் காட்டுவார் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சஜீத் பிரேமதாச  வெற்றி பெற்றால் அவர் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பார் என கருதப்பட்ட நிலையில்  இந்திய சார்புக்கு எதிரான கருத்துடையவர்  வெற்றி பெற்றிருப்பது இந்திய -இலங்கை உறவில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என்பதை இனி வரும் நாட்களில் தெரியவரும்.

திசநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொழும்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர், 2014 முதல் மக்கள் விடுதலை முன்னணி  கட்சித் தலைவராகவும், 2019 முதல் தேசிய மக்கள் சக்தியின்  தலைவராகவும் உள்ளார். அவர் 2019 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருந்தார். திசாநாயக்க தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஜேவிபியுடன் தொடர்புடையவராக இருந்தார்.

1995ல் ஜேவிபி அரசியல் தலைமையகத்தில் இணைவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். செப்டம்பர் 2000 முதல் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

சந்திரிகா  அமைச்சரவையில் 2004 முதல் 2005 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் அனுர குமார திசாநாயக. இவருக்கு வயது 56.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!