Skip to content

லஞ்சம்: திருச்சி கலால் உதவி ஆணையர் கணேசன் வீட்டில் போலீசார் ரெய்டு- முக்கிய ஆவணங்கள் சிக்கின

  • by Authour

விருதுநகரில், கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3,75,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசாா  சோதனை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. அதில் உதவி ஆணையராக திருச்சியைச் சேர்ந்த ஆர். கணேசன் (59) பணியாற்றி வருகிறார். அவர் தனியார் மதுக்கூட (பார்) உரிமையாளர்களிடம்  லஞ்சம் பெறுவதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்சக  தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லஞ்சப்பணத்துடன் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு சுமார் 10 மணியளவில் கணேசன் தனது காரில் திருச்சிக்கு புறப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விருதுநகர் – மதுரை சாலையில் சத்திரரெட்டியபட்டி விலக்கு பகுதியில் அவரது காரை விருதுநகர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நிறுத்தி திடீர் சோதனையிட்டனர். காரில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.3,75,500 ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலால் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச்சென்று சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இச்சம்பவத்தை தொடாந்து திருச்சி விமான நிலையம் அருகே  உள்ள இ.பி. காலனியில் உள்ள  கலால் உதவி ஆணையர்  கணேசன்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார்நேற்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள் ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

error: Content is protected !!