மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி என 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி சூறையாடப்பட்டது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று கல்வி அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராகுல் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் 4வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்த பள்ளி தாளாளரின் கணவர் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். அதன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.