ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ், பிரவீன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிைலயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தற்போது மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். அவரை போலீசார் கரூர் அழைத்து வருகிறார்கள்.