அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சையில் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று. ஆனால் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு இந்த தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறார்கள். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சொல்லவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை பார்த்ததுக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சொல்வோம். சிவில் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. இந்த தீர்ப்பு சிவில் வழக்குகளை கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம். சிவில் கோர்ட் வழக்குகளை துரிதப்படுத்துவோம் என்றார்.