திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா புதுரான் வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசன் (33) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் தமிழ் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார்
இந்த நிலையில் அவருடைய நண்பரான மல்லகுண்டா முத்துநகர் பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் அசோக்குமார் (33) என்பவருக்கு சக்தி பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் கடை வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பைனான்ஸ் கடை வைத்து கொடுத்த நண்பனை எதிர்த்து அசோக் குமார்.
தமிழரசனிடம் பைனான்ஸ் எடுப்பவர்களிடம் தமிழரசனை பற்றி தகாத வார்த்தைகளாலும் மேலும் அவரைப் பற்றி குறை கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் தமிழரசனிடம் அசோக்குமார் சுமார் ஆறு லட்ச ரூபாய் பணத்தை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அசோக் குமார் மதுபான கடையின் அருகே நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திரும்பவும் இன்று காலை தமிழரசனின் வீட்டு அருகே வந்து அசோக்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரும் தமிழரசனை சர மாறியாக தாக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனால் மயக்கமடைந்த தமிழரசனை மீட்டு அவருடைய குடும்பத்தினர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசோக் குமார் தமிழரசனை தாக்கும் வீடியோ வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன அதன் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.