தமிழகத்தில் பள்ளிகளுக்கான(6முதல் 9 வரை) ஆண்டு இறுதி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி, மே மாதம் முதல்வாரத்தில் முடியும். இந்த ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஆண்டு இறுதி தேர்வை தொடங்கி நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே தேர்வை முன்கூட்டியே நடத்திவிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி 24ம் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஏப்ரல் 17ம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளனர்.