விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இன்று தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், உதயநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்களும் கலந்து கொண்டனர்.