விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் அந்த தொகுதியில் ஜூலை 10ம் தேதி் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா காலை 11.12 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட வழங்கல் அதிகாரி சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தாலுகா அலுவலகம் தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக ஓட்டுகள் வாங்கி அமோகமாக வெற்றி பெறுவார். இந்த தேர்தல் சிவாவுக்கு முதல் தேர்தல், அதுபோல திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எனது மகன் கவுதம சிகாமணிக்கும், அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பேற்ற பின் நடக்கிற முதல் தேர்தல். எனவே முதல் தேர்தலிலேயே இருவரும் வெற்றி பெறுவார்கள்.ஜெகத் ரட்சகன் எம்.பி. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.