பாஜ தலைவர்களை சந்திக்க சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி … தமிழகத்தின் கணிப்புகளை தாண்டி நேர் எதிர் திசையில் பாஜக நடைபோடும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் என்பது போன்றது. அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. அண்ணாமலை, நான் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம். கூட்டணி பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். யாரை பற்றியும் நான் தவறாக சொல்ல மாட்டேன். என்னுடைய தனி உலகத்தில் இருக்கிறேன். தேசத்தில் ஊழலற்ற ஒரே கட்சி என்பதால் பாஜக மீது அனைவருக்கும் வெறுப்பு. கம்யூனிஸ்ட்கள் அவர்களது கொள்கைக்கு முரணாக செயல்படுகிறார்கள். டில்லிக்கு செல்வதால் என்ன நடந்துவிட போகிறது. நான் ஒரே மாதிரிதான் இருப்பேன். என் மீது இரண்டரை ஆண்டுகளாக எல்லோரும் கல் வீசுகிறார்கள். கருத்துக்கள் அனைத்தையும் வரவேற்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
பதவி என்பது வெங்காயம்.. டில்லி சென்ற அண்ணாமலை பேட்டி..
- by Authour