டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்.. தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் கூறுகிறீர்களா? என்கிற கேள்விக்கு பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த கட்சிகளை நான் சொல்கிறேன். அது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்றார். அதேபோல், 1991-96 வரையில் இருந்த அதிமுக ஆட்சி ஊழல் குறித்து மிகவும் விமர்சிக்கப்பட்டது.. அதுபற்றிய உங்களது கருத்து என்ன? என்கிற கேள்விக்கு இங்கே இருக்கும் ஆட்சிகள் எல்லாமே ஊழல் செய்யும் ஆட்சிகளாகவே உள்ளன. முன்னாள் முதல்வரே ஊழல் காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என அண்ணாமலை தனது பேட்டியில் அதிமுகவையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அண்ணாமலையில் இந்த பேட்டிக்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்…