இதில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
திருக்கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு ஆண்டிற்கு ரூ.112 கோடி செலவாகிறது. 3.50 கோடி பேர் பயனடைகின்றனர். கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நலத்திட்டங்கள் நடைபெறுவதும், நாளுக்கு நாள் கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும் அண்ணாமலை போன்றோருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பாமல் இருக்குமா?
எங்கள் இயக்கத்தை பொறுத்தளவில் அடிக்க அடிக்க உயரும் பந்து இது. தீட்ட தீட்ட பட்டை தரும் வைரம் இது.எங்கள் இயக்க தொண்டர்கள் இன்னும் வீறுநடைபோட்டுக்கொண்டே இருப்பார்கள். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். களத்திற்கு வரச்சொல்லுங்கள். 2026 தேர்தலில் திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்து அவரை தோற்கடிப்போம் .
இவ்வாறு அவர் கூறினார்.