என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். திருச்சியில் அண்ணாமலையை வரவேற்று பாஜகவினர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இன்றி பேனர்கள் வைத்ததாக கோட்டை ,காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பாஜகவினர் 6பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..
- by Authour
