Skip to content
Home » அண்ணாமலை லண்டனில் சர்க்கஸ் படித்து வந்திருக்கிறார், திருநாவுக்கரசர் பேட்டி

அண்ணாமலை லண்டனில் சர்க்கஸ் படித்து வந்திருக்கிறார், திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான   முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை ‘சர்க்கஸ்’ படிக்க லண்டன் சென்று வந்துள்ளார்.சர்க்கஸில் தான் கோமாளிகள் சாட்டையடித்து மக்களை மகிழ்விப்பர்.

ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என அரசியல் போராட்டங்களுக்கு எவ்வளவோ வடிவங்கள் உள்ளது. ஆனால், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளிபோல் ஆகிவிட்டது.

கிண்டல், கேலியாக மக்கள் பார்க்கின்றனர். நேற்று தொலைக்காட்சிக்கு முன் இரண்டு செருப்பையும் அரைமணிநேரம் எடுத்துக் காட்டி கொண்டிருக்கின்றார். மக்களுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னால் புரியாதா?

ஐபிஎஸ் படித்த மனிதர் தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.  கோமாளி அரசியலை முன்னெடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.