கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- 3 ஆண்டுகள் கஷ்டபட்டுதான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா? என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனைபோல எதையும் பேச முடியவில்லை; செய்ய முடியவில்லை.. சரி.. தவறு என எதையும் கூற முடியவில்லை.
பாஜக தேசத்தை ஒருமைப்படுத்தும் கட்சி. எந்த கட்சிக்கும் இல்லாத ஆன்மா பாஜகவிற்கு உள்ளது. பாஜகவில் சேர பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்றும் அவசியம் .பாஜகவை பலர் குறை சொல்வார்கள்; அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவின் வேரை நாம் வலுவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலில் 8,000 பூத்களில் பாஜக முதலிடம் பெற்றுள்ளது.கோவையில் பாஜக தோல்வி அடைந்தது என்று பார்க்காதீர்கள்; வெற்றி கொஞ்சம் தள்ளிபோய் இருக்கிறது என பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.