பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணி மாட்டேன். அரசுக்கு எதிராக என் வீட்டு முன் நாளை காலை 10 மணிக்கு எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வேன். நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருந்து முருகனிடம் முறையிடப் போகிறேன். ஒவ்வொரு பாஜகவினர் வீட்டிலும் போராட்ம் நடைபெறும். அண்ணா பல்கலை வளாகத்தில் சிசிடிவி காமிரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகி விட்டது தமிழகம். எல்லா பாஜகவினரும் வீட்டுக்கு வெளியே வந்து போராட்டம் நடத்துவார்கள். காவல்துறை எப்ஐஆர் விரச கதை போல உள்ளது. மாணவியை அவமானம் செய்து ஒரு குடும்பத்தை நாசமாக்கி விட்டனர். நாளை முதல் எனது வேறு அரசியலை பார்ப்பீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அண்ணாமலை தனது செருப்பை கழற்றி விட்டார்.