தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, மேலிட பார்வையாளர் சி.டி. ரவி ஆகியோர் இன்று காலை 9 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அண்ணாமலை வந்தார். அங்கு ரவி மற்றும் கரு. நாகராஜன் உள்ளிட்டவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் இன்னொரு அணி தலைவரான ஓபிஎஸ்சையும் அண்ணாமலை சந்திக்க முடிவு செய்து 10. 10 மணிக்கு ஓபிஎஸ்சின் இல்லம் சென்றார். அங்கும் அவர் ஓபிஎஸ்சுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக டில்லி மேலிடம் கூறிய சில தகவல்களை அண்ணாமலை ஓபிஎஸ்சிடம் கூறினார் என தெரிகிறது. இந்த சந்திப்பு மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தரப்பில் ஒரே வேட்பாளர் நிறுத்த ப்படலாம். அப்படி ஒரே வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது குறித்தும் அண்ணாமலை கூறியதாக தெரிகிறது.