தெலங்கானா கவர்னர் தமிழிசை அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பது பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் இன்று கேட்ட போது அவர் அளித்த பதிலில், கவர்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. காரணம் என்னவென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்கவேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். ஆனால் ஆளுநர் தினம் தினம் என்னை போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் என்றார்.
