சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்ற விழாக்கள் மற்றும் அவரை வரவேற்கும்-வழியனுப்பும் நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அதிமுக கூட்டணி குறித்து அண்ணாமலை மாற்று கருத்துதெரிவித்திருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்ததேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜஇருக்கும் என அறிவித்து விட்டார். இந்த நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை பிரதமர் வரவேற்பு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அண்ணாமலை இல்லாததற்கு கர்நாடக மாநிலத்தேர்தல் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் கர்நாடக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை தேர்வுசெய்யும் பணிக்காக டில்லி சென்றுள்ளார். இது குறித்து பிரதமரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..