Skip to content

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தொழிலாளா்கள் அச்சத்தில் இருப்பதால் அவா்கள் சொந்த ஊா் திரும்பத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆள் பற்றாக்குறையால் தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறையைச் சோ்ந்த தொழில்முனைவோா் அரசுக்கு கவலை தெரிவித்திருக்கின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடா்பாக விசாரிக்க தனிப் படையினா் பீகாா் விரைந்திருக்கின்றனா். இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என தமிழக அரசுக்கு பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!