கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியிலுள்ள அன்னை மகளிர் கல்லூரி மற்றும் வெள்ளாளர் மகளிர் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் மாணவியர் பாரம்பரிய உடையான சேலை அணிந்து பங்கேற்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து மாணவியர்கள், புத்தம் புது மண்பானையில் பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மாணவியர் தமிழகத்தின் பாரம்பரிர விளையாட்டுகளான
கும்மியாட்டம், கரகாட்டம், தமிழ் திரைப்படப் பாடலுக்கு ஏற்றவாறு நடனங்களை ஆடி அசத்தினர். அதன்பின், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர் என 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.