சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் ந. அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர். தந்தை பெயர் பி. நடராஜன், தொழில் – விவசாயம், விசைத்தறி, பெட்ரோல் பங்க். 1988 முதல் வன்னியர் சங்கத்தில் இணைந்து கட்சிப்பணியாற்றத் தொடங்கினார்.
தற்போது பாமகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். எடப்பாடியில் கவுன்சிலராக பணியாற்றி உள்ளார். 2016ல் எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். கட்சியில் இளைஞரணி செயலாளர், மாவட்ட செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கட்சி அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றவர்.