Skip to content

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது

 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும்  மாணவரும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் (டிச.,23) இரவு காதலர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து மாணவரை தாக்கிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று பணியில் இருந்த இரவுநேர காவலாளியிடமும் விசாரணை நடந்தது. இந்நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், நடமாடும் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். தனியாக இருந்த காதலர்களை வீடியோ எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவரது மொபைல்போனில் பல வீடியோக்கள் உள்ளன. 2011 ல் இதேபோன்று அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!