Skip to content

எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

  • by Authour

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., ‘லீக்’ ஆனது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. லீக் செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேட்டிருந்தது. இந்த வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் இணையத்தில் கசிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எப்.ஐ.ஆர்., ‘பிளாக்’ செய்யப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் அருண், பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் எப்ஐஆர் லீக் ஆனது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த எப்.ஐ.ஆர்., நகலை, சி.சி.டி.என்.எஸ்.,  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு, ‘சம்மன்’ அனுப்பி விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில், குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும், ‘கிரைம்’ பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில், மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.  இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், எப்.ஐ.ஆர்., நகலை, ‘வாட்ஸாப்’ தளத்தில் பகிர்ந்த கிரைம் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு, ‘உங்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். வீட்டு முகவரியை சொல்லுங்கள்’ என, மிரட்டல் விடுப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!