சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக பிரியாணிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சார்பில் ஐகோர்ட்டில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்கிறது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர், உள்துறை செயலாளர், டிஜிபி, துணைவேந்தர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.