சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் அளித்த பேட்டி.. அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி, பேராசிரியர்கள் சிலர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கையை, கவர்னரிடம் தாக்கல் செய்துள்ளோம். கடந்த 2022 – 23ம் கல்வியாண்டில், 292 கல்லுாரிகளிலும், 2023 – 24ல், 295 கல்லுாரிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக கண்டறிந்துள்ளோம். இந்த கல்லுாரிகளுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், உயர் கல்வித்துறையும் கமிட்டி அமைத்துள்ளது. கல்லுாரிகள் தரும் விளக்கத்தை கமிட்டிக்கு அனுப்ப உள்ளோம். வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், பேராசிரியர்கள் மீது தவறு இருக்கிறதா? அல்லது கல்லுாரிகள் மீது தவறு இருக்கிறதா? என்ற விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த பேராசிரியர்கள், அண்ணா பல்கலையின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை விதிக்கப்படும் என்றார் வேல்ராஜ்…
Tags:அண்ணா பல்கலைகழகம்