தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர், திமுக நிறுவனர் அண்ணா வின் 55 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா, மாவட்டப் பிரதிநிதி மனோகரன், மாவட்ட சிறு பான்மை பிரிவு பக்கீர்மைதீன், பேரூராட்சி மன்றத் தலைவர் புனிதவதி, துணைத் தலைவர் அழகேசன், திமுக மாவட்ட அயலக அணி நிர்வாகி சாதிக்பாட்சா, மாவட்ட மகளிரணி நிர்வாகி சத்யபிரியா, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
