Skip to content

அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ,   திருச்சி  காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ரங்கசாமி, தலைமை நிலைய செயலாளரும் வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் மாஸ் பிரபு, தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமுர்த்தி , தனசிங், கமருதீன், டோல்கேட் கதிரவன்,நெல்லை லட்சுமணன், லதா, வேதாத்திரி நகர் பாலு, உமாபதி,
கல்நாயக் சதீஷ்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக    கட்சியின்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு
அளித்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்புள்ளார்.
இதன் மூலம் 90 சதவீத தொண்டர்களின் மன ஓட்டத்தை தெளிவுபடுத்தி உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒரு சிலர் தவிர மற்ற
அனைவரும் பாஜகவுடன் அதிமுக  கூட்டணி வைப்பதை  விரும்புகின்றனர்.
பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பலவீனம் அடைந்துள்ளது.
அவர் திமுக வெற்றிக்கு பாடுபடுகிறார். இதனை மனதில் கொண்டு
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாங்கள் ஒரு அணியில் இணைய முடியும். ஆனால் ஒருகட்சியாக இணைய முடியாது.
எடப்பாடி பழனிச்சாமியை அதிகாரம், பதவி வெறி பாடாய் படுத்துகிறது.

முன்னாள் முதல்வர் அண்ணா1967 ல் ஆட்சிக்கு வந்த பிறகு
இரு மொழிக் கொள்கை கொண்டு வந்தார்.
காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் இணைப்பு மொழியாக ஒரு பொதுமொழி உருவாக வேண்டும், அதுவரை ஆங்கிலம் தொடர வேண்டும் என்றார்.
அண்ணா தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் மூன்றாவது மொழியாக
இந்தியை ஏற்று இருப்பார்.
அண்ணா உயிரோடு இருந்திருந்தால் இந்தியா முழுவதும் இணைப்பு மொழியாக இந்தியை உறுதியாக தமிழ்நாட்டில் அனுமதித்து இருப்பார் என்பது என் கருத்து.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

error: Content is protected !!