பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55 – வது நினைவு நாள் முன்னிட்டு கரூர் மாவட்டக் அதிமுக சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைகளுக்கு அவைத் தலைவர் திரு வி கா தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை…
- by Authour
