முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் மார்பளவு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட திமுக
சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதாசன், மாநில மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.