பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்துக்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்திருக்கிறது. கடலூரில் புதிய துறைமுகம் அமைக்கப் வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. புதிய துறைமுகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.
புதிதாக அமைக்கப்படவுள்ள துறைமுகத்திற்கு கடலூரைச் சேர்ந்த விடுதலைப்போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும். அது தான் அவருக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் சிறந்த மரியாதையாக இருக்கும்.கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.