அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.22 கோடியில் கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. 850 பேர் அமரும் வகையில் நவீனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கிற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டினார்.
அனிதா அரியலூர் அடுத்து குமுழூர் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற சுமைதூக்கும் தொழிலாளியின் மகள். இவர் 2017ல் பிளஸ்2 தேர்ச்சி பெற்றார். இவர் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் 700க்கு 86
மதிப்பெண்களே பெற்றதால் அவரது மருத்துவர் கனவு கலைந்து போனது. எனவே உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டுக்கு எதிராக போராடினார். அதில் வெற்றி கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயரை முதல்வர் சூட்டி உள்ளார்.