Skip to content

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அனில் அம்பானி.  தொலைத்தொடர்பு, எரிபொருள், டெக்ஸ்டைல்ஸ் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை நடத்தினார்.

இந்த நிலையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனில் அம்பானி நிறுவனத்துக்கு இந்த தடை விதிக்கப்பட்டதோடு, ரூ.25 கோடி அபராதம் விதித்தும் செபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிறுவனத்தின் நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் அம்பானிக்கு இந்த தடையை செபி விதித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்திற்கு 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *