குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும். இந்நிலையில் குடியரசு தின விழாவிக் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கான ஒத்திகைகளில் ராணுவத்தினர், காவல்துறையினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் குடியரசு தின விழா வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. அதனையொட்டி கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில்
அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அணிவகுப்பு துவங்கப்படுவதில் இருந்து தேசிய கொடிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மரியாதை செலுத்துவது, மாவட்ட ஆட்சியர் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும் போது பின்பற்ற வேண்டியவை உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது.