சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவரது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் லேசான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரஜினி நலமுடன் இருக்கிறார். நாளை அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிக்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட உள்ளது.