கோவை மாநகராட்சி வேலாண்டிபாளையம் பகுதி 42 வது வார்டு மற்றும் 43 வது வார்டில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில்115 குழந்தைகள் உள்ளனர். நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அங்கன்வாடி வளாகத்திற்கு உள்ளேயே அமர்ந்து மது அருந்திவிட்டு மதுபான பாட்டில்களை அங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இது அங்குள்ள குழந்தைகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துவதால் காவல்துறையினர் இரவு
நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு அங்கன்வாடி மைய வளாகத்திற்குள் மதுபானங்கள் அருந்துபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கன்வாடி வளாகத்தினை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினம்தோறும் சுத்தம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.