Skip to content

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

  • by Authour

ஆங்கில செய்தி சேனலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி..  தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர மாநில அரசு யோசித்து வருகிறது. அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும்.

தென்னிந்தியாவில் முதியோர் அதிகரித்துள்ளனர். இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். முதியோர் அதிகரிப்பது தேசிய பிரச்னை. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் ஏற்கனவே முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொருளாதார சுமையுடன் சிக்கித் தவிக்கின்றன. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் இந்தியாவையும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல கிராமங்களில், வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். இளைய மக்கள் நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!