ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதி உலா தொடங்கியது.
பக்தர்கள், பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு வந்தனர். கோண்டா பித்ரகுண்டாவுக்கும் பழைய பித்ரகுண்டாவுக்கும் இடையே சென்றபோது, சாலையின் ஓரத்தில் தேரின் சக்கரம் சிக்கியது. இதனால் திருப்பத்தில் மீண்டும் முன்னோக்கிச் செல்லவில்லை. மின் வினியோகம் இல்லாததால், ஜெனரேட்டர் அமைத்தால் மட்டுமே முன்னாள் செல்ல முடியும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்து அறநிலைய துறை அதிகாரிகள் மூலம் ஜெனரேட்டர் அமைத்த பிறகே தேர் நகர்ந்தது. மீண்டும் தேர் கொண்டபிரகுண்டாவுக்கு வந்தபோது அங்கு சாலையோரத்தில் உள்ள ஆழமான பள்ளத்தில் இறங்கியது. இதனால் பள்ளத்தில் சக்கரம் சிக்கி தேர் வலது பக்கமாக முன்னோக்கி விழுந்தது. இந்த சம்பவத்தில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. நெல்லுர் மாவட்ட எஸ்.பி விஜயராவ் உத்தரவின் பேரில் டிஎஸ்பி வெங்கடரமணா கவாலி எம்எல்ஏ ராமிரெட்டி பிரதாப் குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சுவாமி சிலைகளை பத்திரமாக எடுக்க உத்தரவிட்டார். பின்னர் சம்ரோக்ஷன பூஜைகளுக்கு பிறகு கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து கிரேன் உதவியுடன் தேரை நிமிர்த்தினர்.