Skip to content

பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…

  • by Authour

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில்  பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள்  வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி s

அதில் வெங்காய வெடி இருப்பதை அறியாமல் வழக்கம்போல் மூட்டைகளை இறக்குவது போன்று   கீழே போட்டார். உடனடியாக அந்த மூட்டைக்குள் இருந்து வெங்காய வெடிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதனால் அங்கு பணியில் இருந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். காயமடைந்த சுமைதூக்கும் தொழிலாக நான்கு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்காய வெடிகளை ஐதராபாத்தில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் வரவழைத்த நபரை பிடித்து விசாரணை செய்கின்றனர்.

error: Content is protected !!