பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அன்புமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், சாதி சங்கங்கள் கலந்து கொண்டன. ஆப்பாட்டம் முடிவில் பேசிய அன்புமணி, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, தொடர் போராட்டம் நடத்தப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு
- by Authour
