Skip to content
Home » உடனடி ரெஸ்பான்ஸ்… அமைச்சர் அன்பில் மகேசுக்கு etamil news சார்பில் நன்றி….

உடனடி ரெஸ்பான்ஸ்… அமைச்சர் அன்பில் மகேசுக்கு etamil news சார்பில் நன்றி….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை (வார்டு எண் 44, 45) மூகாம்பிகை நகர், புது அய்யனார் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக தார்ச்சாலை போடப்படவில்லை. கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் இந்த சாலைகள் நாற்று நடவு செய்யும் அளவுக்கு சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால் இச்சாலையில் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் சொந்த தொகுதி. சாலையை சீரமைக்காவிட்டால் நாற்று நடும் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.
இதுபற்றி etamil newsல் இன்று செய்தி வெளியிடப்பட்டது. ‘அமைச்சர் மகேஷ் தொகுதியில்…. வயல் காடாக மாறிய சாலைகள்…. நாற்று நடும் போராட்டம்,,,, என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே நடவடிக்கையில் இறங்கினார். அதன்படி கிராவல் மண் கொட்டி தற்காலிக சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், எனது தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகர் புது அய்யனார் தெருவில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும். மழையின் காரணமாக தற்போது மக்கள் பயணிக்க முடியாத சூழல் உள்ளது என்பதை அறிந்து உடனடியாக புதிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டோம்.
அதனை தொடர்ந்து தற்போது தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். விரைவில் நிரந்தரமான சாலை அமைத்து அதனை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்போம் என்று தெரிவித்துள்ளார். இ தமிழ் நியூஸ் எதிரொலியால் தற்காலிக சாலை அமைக்க நடவடிக்கை எடுத்ததற்கும், நிரந்தர சாலை அமைக்க உறுதி கொடுத்ததற்கும் அமைச்சர் அன்பில் மகேசுக்கு, இ தமிழ் நியூஸ் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *