திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து திமுக மாநில நிர்வாகிகள் அன்பழகன் படத்திற்கு மரியாதை செய்தனர். இது போல தமிழ்நாடு முழுவதும் இன்று அன்பழகனின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
- by Authour
