பேரறிஞர் அண்ணா அவர்களால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். பேராசிரியர் க. அன்பழகன் 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற
காலகட்டத்தில் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார். அத்துடன் 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன். கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளபேராசிரியர் க.அன்பழகன் 8 அடி உயர வெண்கல சிலையினை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் துரைமுருகன், அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், உதயநிதி, கே.என்.நேரு, சேகர் பாபு, மகேஷ், எ.வ.வேலு, பொன்முடி, மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.