பேராசிரியர் அன்பழகன் நூற்றண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியர்அன்பழகன் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை, மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன்,மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன்,சி.ராஜேந்திரன்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் தங்க.கமல், டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ். செல்வக்குமார்,
மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் தம்பை.தர்மராஜ், நகராட்சி உறுப்பினர் துரை.காமராஜ்,
வேப்பந்தட்டை ஒன்றிய துணைத்தலைவர் எம்.ரெங்கராஜ் மற்றும் அம்பேத்கர், எஸ்.அழகுவேல், பெரம்பலூர் நகர மாணவர் அணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் பி.அறிவுச்செல்வன், ராஜாசிதம்பரம், சின்னதுரை, மதுபாலன், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.