திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் அவரது படத்திற்கு
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி , மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.